Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வைகை அணை விரைவில் தூர்வாரப்படும்: அமைச்சர் நிர்மல்குமார்

வைகை அணை விரைவில் தூர்வாரப்படும்: அமைச்சர் நிர்மல்குமார்

தேனி மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

பகிரவும் WhatsApp Facebook

வைகை அணை விரைவில் தூர்வாரப்படும் என அமைச்சர் சிடிஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். தேனி ஆட்சியர் அலுவலகத்தில் 1,960 பயனாளிகளுக்கு ரூ 26.45 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆட்சியர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.

அமைச்சர் சிடிஆர்.நிர்மல்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது: தேனி மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். வைகை அணை விரைவில் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். 

வைகை அணை கட்டப்பட்டதில் இருந்து தூர் வார இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தவெக ஆட்சியில் முதல்முறையாக வைகை அணையைத் தூர்வாரி, விவசாயிகளுக்கு உதவுவோம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், பெரியகுளம் எம்எல்ஏ க.சபரி ஐங்கரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி
இந்த வாரம் பங்குச் சந்தை போக்கு எப்படி இருக்கும்?
அடுத்த செய்தி
Services trade cushion faces pressure as imports outpace exports

தொடர்புடைய செய்திகள்